Tamilவிளையாட்டு

டேவிட் வார்னரின் ஆசையை நிறைவேற்றுமா ஆஸ்திரேலிய கிரிக்கெட் கவுன்சில்?

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 17-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார். அவருடன் ஜோ பேர்ன்ஸ் மற்றொரு தொடக்க வீரராக களம் இறங்கினார்.

ஆனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இளம் வீரரான வில் புக்கோவ்ஸ்கி களம் இறங்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் ஜோ பேர்ன்ஸ் தொடக்க வீரராக களம் இறங்கினால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து டேவிட் வார்னர் கூறுகையில் ‘‘நானும் ஜோ பேர்ன்ஸும் கடந்த சில ஆண்டுகளாக தொடக்க வீரர்களாக களம் இறங்கி சிறப்பாக விளையாடியதாக நினைக்கிறேன். ஜோ பேர்ன்ஸ் நீண்ட காலத்திற்கான வீரர் என்பது எனக்குத் தெரியும். ஆடுகளத்தில் இறங்கிவிட்டால், ஒருவருக்கொருவர் ஆட்டமும் சிறப்பாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், இடத்திற்கு யார் சரியான நபராக இருப்பார்கள் என்பதை தேர்வாளர்கள் முடிவு செய்வார்கள்’’ என்றார்.