Tamilவிளையாட்டு

பெண்கள் டி20 உலக கோப்பை – வங்காள தேசத்தை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை தொடரில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள வங்காள தேசம் – இங்கிலாந்து அணிகள் மோதின.

இங்கிலாந்து வீராங்கனைகளின் நேர்த்தியான பந்து வீச்சால் வங்காள தேசம் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தொடக்க வீராங்கனை அயஷா ரஹ்மான் அதிகபட்சமாக 39 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணி சார்பில் கிர்ஸ்டி கோர்டோன் அதிகபட்சமாச 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

மழை பெய்ததால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 16 ஓவரில் 64 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து 9.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து ‘ஏ’ பிரிவில் ஒரு வெற்றியுடன் மூன்று புள்ளிகள் பெற்று முதலிடத்தி் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *