Tamilவிளையாட்டு

ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்குவதை விரும்புகிறேன் – பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவர் எப்போதுமே மிடில் ஆர்டர் வரிசையில்தான் களம் இறங்கி பேட்டிங் செய்வார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்ஸ் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். சில போட்டிகளில் சொதப்பியதால் விமர்சனத்திற்கு உள்ளானார். அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். இவரது சதத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இன்னும் பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் எப்போதுமே தொடக்க வீரராக களம் இறங்க விரும்புவேன் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.