Tamilசெய்திகள்

சென்னையின் பல பகுதிகளில் கனமழை

மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், எழும்பூர், சேப்பாக்கம், அடையாறு, கிரீன்வேஸ் சாலை, அண்ணாசாலை, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, திருவான்மியூர், பட்டினப்பாக்கம், அண்ணா சாலை, கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

காலை முதலேயே பெய்துவரும் கனமழை காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோரும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.