நம்மை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் – ராகுல் காந்தி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, நம்மை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்த வாரம் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துவிடும், 1 கோடி நோயாளிகள் சிகிச்சையில் இருப்பார்கள். தனிமனிதரின் ஈகோ வை பாதுகாக்க அமல்படுத்தப்பட்ட திட்டமிடப்படாத ஊரடங்கு, நாட்டில் கொரோனவை பரவச் செய்து விட்டது.
மோடி அரசு தன்னிறைவு பெற்றதாக கூறுகிறது. நம்மை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பிரதமர் மயில்களுடன் பிஸியாக இருக்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.