பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை
மனசு மமதா, மௌனராகம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தவர் ஸ்ரவானி. இவர் கடந்த 8 வருடங்களாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு ஐதராபாத் மதுராநகரில் உள்ள தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அவரது பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் ஸ்ரவானியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இளம் வயதில் சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.