பல்கலைக்கழகங்கள் விரும்பினால் செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்வை நடத்த அனுமதி வழங்கியதுடன், தேர்வை எழுதாமல் பட்டங்களை வழங்கக்கூடாது என தெரிவித்தது. இதனையடுத்து, வரும் 30ம் தேதிக்குள் தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்கும்படி பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்நிலையில், முதலாம், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளுக்கு எதிராக மாணவர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பல்கலைக்கழகங்கள் விரும்பினால், முதலாம், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்தலாம் என்றும், யுஜிசி விதிகளுக்கு உட்பட்டு தேர்வை நடத்தலாம் என தெரிவித்துள்ளது.
மேலும் முதலாம், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளுக்கு எதிராக மாணவர்கள் அமைப்பு தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.