முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி பல்வேறு தலைவர்கள் மற்றும் கட்சியினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நல்ல உடல்நலத்துடன் நீண்டகாலம் மக்கள் பணியாற்ற பிரார்த்தனை செய்வதாக கூறி உள்ளார்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘தமிழக முதலமைச்சர் அன்பு சகோதரர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு எனது உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இறைவனின் அருளோடு உடல் ஆரோக்கியத்தோடு , நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இந்த பிறந்த நாளில் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என கூறி உள்ளார்.