மன்மோகன் சிங் விரைவில் குணமடைவார் – மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் கூறியதாவது:- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் பூரண உடல் நலம்பெற வேண்டும் என விரும்புவதாகவும் மேலும் இதுபோன்ற நேரங்களில் மன்மோகன் சிங்கின் சேவை நமது நாட்டுக்கு தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.