ஐபிஎல் போட்டி நடந்தால் பங்கேற்பேன் – டேவிட் வார்னர் அறிவிப்பு
ஐபிஎல் 2020 சீசன் வருகிற 29-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று பீதியால் ஏப்ரல் 15-ந்தேதி வரை தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளும் தற்போது நடைபெறவில்லை. இதனால் வீரர்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்று ஏப்ரல் 15-ந்தேதிக்குள் கட்டுப்படுத்தப்பட்டால் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ அனைத்து கட்ட முயற்சிகளையும் எடுக்கும்.
இந்நிலையில் பிசிசிஐ ஐபிஎல் போட்டியை நடத்தினால் பங்கேற்பேன் என்று டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
டேவிட் வார்னர் சார்பில் அவரது மானேஜர் எர்ஸ்கைன் கூறுகையில் ‘‘பிசிசிஐ இந்த சீசனை நடத்துவதில் உறுதியாக இருந்தால், வார்னர் விளையாடுவார். இதற்கிடையில் ஆஸ்திரேலிய அரசு நான்காம் நிலை பயணத்தடையை விதித்துள்ளது. நான்காம் நிலை என்பது எந்தவொரு நபரும் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்பதுதான்.
ஒருவேளை பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் டேவிட் வார்னர் பங்கேற்பார். விஷயங்கள் வியத்தகு முறையில் மாறும். அதற்கு சில மணி நேர இடைவேளி போதுமானது. பதில் என்பது உங்களது எண்ணத்தை மாற்றுவதுதான்’’ என்றார்.
ஐபிஎல் போட்டியில் விளையாட 17 ஆஸ்திரேலிய வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், ஸ்மித் போன்றோர் முக்கியமானவர்கள்.