ஆஸ்திரேலியிய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பரிசோதனை!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.
சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு சொந்த நாட்டுக்கு திரும்பினார்கள். தற்போது ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணியுடன் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கனே ரிச்சர்ட்சன்னுக்கு திடீரென்று தொண்டை வலி ஏற்பட்டது. மேலும் அவருக்கு உடல்நலமும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைடுத்து அவரை தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிவில் அவரது உடல்நலம் பாதிப்பு குறித்து தெரிய வரும்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறும் போது, கனே ரிச்சர்ட்சன்னுக்கு எங்களது மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய அரசு வகுத்து கொடுத்த வழிமுறைகளின் படி அவரை அணியில் உள்ள மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி வைத்து இருக்கிறோம்” என்று தெரிவித்து உள்ளது.