இன்றைய ராசிபலன்கள்- மார்ச் 7, 2020
மேஷம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்திட கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள்.
ரிஷபம்: வெற்றி நோக்கில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூலம் உண்டாகும். ஆதாயம் அதிகரிக்கும்.
மிதுனம்: பிறர் சொல்லும் அவதுாறு பேச்சை பொருட்படுத்த வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாப்பது நல்லது.
கடகம்: பேச்சு, செயலில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறு சரி செய்வதால் வளர்ச்சி சீராகும்.
சிம்மம்: கருணை நிறைந்த மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும்.
கன்னி: உங்கள் மீது சிலர் பொறாமை கொள்வர். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது.
துலாம்: நண்பரின் நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரம் புதியவர்களின் ஆதரவால் வளர்ச்சி பெறும்.
விருச்சிகம்: உறவினரிடம் பேச நினைத்த விஷயம் மாறி போகலாம். தொழில்,வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற தாமதமாகும்.
தனுசு: கடந்த கால உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் கூடுதல் உழைப்பால் சீராகும்.
மகரம்: எதிர்மறையாக இருந்த சூழ்நிலை மறையும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற தகுந்த பணிகளில் ஈடுபடுவீர்கள். லாபம் உயரும்.
கும்பம்: உங்கள் மனதில் சோர்வு ஏற்படலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும்.
மீனம்: பேச்சில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் குளறுபடி சரிசெய்ய புதிய அணுகுமுறை தேவைப்படும்.