திருமணத்திற்குப் பிறகு நடிக்காதது ஏன்? – மனம் திறந்த நஸ்ரியா
மலையாளத்தில் வெளியாகியுள்ள படம் ‘டிரான்ஸ்’. பகத் பாசில், நஸ்ரியா, கவுதம் மேனன், விநாயகன், செம்பியன் வினோத் ஜோஸ், திலீஸ் போத்தன், ஜுன் ஜோசப் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ‘பெங்களூர் டேஸ்’ படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் தன் கணவர் பகத் பாசிலுடன் இணைந்து நடித்துள்ளார் நஸ்ரியா. படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் திருமணத்துக்கு பின் ஏன் திரையுலகில் பெரிய இடைவெளி விடுகிறேன் என்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.
நஸ்ரியா கூறியிருப்பதாவது: நான் கொஞ்சம் சோம்பேறி ஆகிவிட்டேன் அவ்வளவுதான். இரண்டு வருட இடைவெளியை நான் தீர்மானிக்கவில்லை. ஒரு கதை என்னை ஆர்வப்படுத்தினால், நேரத்தில் பொருந்தினால், இதை நடிக்க வேண்டும் என்று யோசிக்க வைத்தால் நடிப்பேன். நான் ஒரு கதை கேட்கும்போது ஆழமாக யோசிக்க மாட்டேன். இது எனக்கு ஆர்வம் தருமா, தராதா என்றே யோசிப்பேன். அளவுக்கதிகமாக யோசிப்பதில்லை’. இவ்வாறு அவர் கூறினார்.