நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – இந்திய அணி அறிவிப்பு
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டுக்கு எதிராக 5 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில், நியூசிலாந்து அணியை 5 போட்டிகளிலும் வென்ற இந்திய அணி தொடரை ஒயிட் வாஷ் செய்தது.
இதையடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. அதன்பிறகு, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்தியா- நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில், காயம் காரணமாக ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு ; – விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, சுப்மான் கில், புஜாரா, ரகானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, விர்திமான் சகா (விக்கெட் கீப்பர்), ரிஷப் பாண்ட் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகம்மது சமி, நவ்தீப் சைனி, இஷாந்த் சர்மா ( உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும்).