அமைச்சர் நிர்மலா சீதாராமான் அல்வா வழங்கி பட்ஜெட் பணியை தொடங்கி வைத்தார்
பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது பழங்கால சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து, இதுதொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இன்று அல்வா தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் பரிமாறப்பட்டது. இதையடுத்து 2020-21ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை அச்சடிக்கும் பணி தொடங்கப்பட்டது.
நிர்மலா சீதாராமன் மத்திய நிதி மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யப்பட உள்ள இரண்டாவது பட்ஜெட் இதுவாகும்.