டோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையை விரைவில் முடித்துக் கொள்வார் – ரவி சாஸ்திரி கருத்து
இந்திய கிரிக்கெட்டில் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. ஐசிசியின் அனைத்து வகை தொடர்களிலும் சாம்பியன் பட்டம் (50 ஓவர் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி) வென்ற ஒரே இந்திய கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ஜூன், ஜூலை மாதத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் அரையிறுதியில் விளையாடினார். அதன்பின் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கிறார்.
மீண்டும் எம்எஸ் டோனி எப்போது கிரிக்கெட்டிற்கு திரும்புவார் என்ற கேள்வி ரசிகர்களுக்குள் இருந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் எம்எஸ் டோனி அவரது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை விரைவில் முடித்துக் கொள்வார் என்று தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
எம்எஸ் டோனி ஒருநாள் கிரிக்கெட் குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘நான் எம்எஸ் டோனியுடன் பேசினேன். அவர் டெஸ்ட் கேரியரை முடித்துக் கொண்டார். ஒருநாள் கேரியரையும் விரைவில் முடித்துக் கொள்வார்.
தற்போது அவரது வயதில் டி20 கிரிக்கெட் போட்டியில் மட்டுமே விளையாட விரும்பலாம். ஐபிஎல் தொடரில் விளையாடும்போது அவரது உடல் எப்படி ஒத்துழைக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.
அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுவார். ஒரு விஷயம் எனக்கு தெரியும், அது என்னவென்றால், அவராகவே அணிக்கு திரும்ப நினைக்கமாட்டார். ஆனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால்…’’ என்றார்.