கவர்னர் உரையை புறக்கணித்து திமுக சட்டசபையில் இருந்து வெளியேறியது
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. இந்த கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.
அனைவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் என கவர்னர் கூறியது, எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் எழுந்து திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்து பேச வாய்ப்பளிக்குமாறு கோரினார்.
ஆனால், கவர்னர் மறுக்கவே, எதிர்க்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தன.