கவர்னர் பன்வாரிலால் புரோகித் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையானது மகிழ்ச்சியுடனும், குதூகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த மகிழ்ச்சிகரமான நன்னாளில், எனது இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களை நம்முடைய கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வாழ்க்கையின் செய்தியானது அன்பு, இரக்கம், சமாதானம், மனதுருக்கம், சகிப்புத்தன்மை ஆகிய உயரிய பண்பு நலன்களை மனித சமுதாயம் முழுவதும் கடைபிடிக்குமாறு வலியுறுத்துகின்றது.
மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகையானது ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வது, விட்டுக்கொடுத்து வாழ்வது போன்ற உயரிய நெறிகளை பயிற்றுவிப்பது மட்டுமல்லாமல், குடும்ப உறவுகள், நண்பர்கள் யாவருடனும் நல்லுறவு கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்திடவும் வழிகாட்டுகின்றது.
நம் அனைவரின் வாழ்விலும் இப்பண்டிகையானது, மகிழ்ச்சி, சந்தோஷம், செழிப்பு ஆகியவற்றை கொண்டு வரவேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.