துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் – எடியூரப்பா அறிவிப்பு
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, கர்நாடக மாநிலம் மங்களூரில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மங்களூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போலீசாரை தாக்க முற்பட்டனர். இதனால் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் படுகாயமடைந்த 2 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில், மங்களூருவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல் மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.