Tamilசெய்திகள்

சென்னை போலீசில் பெண்கள் பாதுகாப்பிற்காக புதிய வாட்ஸ்-அப் எண் அறிமுகம்

சென்னை போலீசில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது.

இந்த பிரிவின் பெண் போலீஸ் அதிகாரியாக துணை கமி‌ஷனர் ஜெயலட்சுமி உள்ளார்.

சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் இதற்கான அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக புகார் செய்ய சென்னை போலீசில் புதிய செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை செலுத்தும் சென்னை பெருநகர காவல்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உயரிய நிலைக்கு எடுத்துச செல்லும் நோக்கத்துடன் பொதுமக்களிடையே கருத்துகளை வேண்டுகிறது.

உங்களது பார்வையில் சென்னை பெருநகரில் ஏதேனும் இடங்களிலோ, சூழ்நிலைகளிலோ மற்றும் நபர்களாலோ பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற தன்மையினை உணர்ந்தால் கீழ்க்கண்ட வசதிகளையப் பயன்படுத்தி தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். இத்தகவல் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான காவல்துறை நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.

தகவல் தெரிவிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். 75300 01100 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் புகார் செய்யலாம். www.facebook.com/chennai.police, dccwc.chennai@gmail.com ஆகியவற்றிலும் புகார் செய்யலாம்.

துணை ஆணையாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு, சென்னை பெருநகர காவல்துறை, கிரீம்ஸ் ரோடு (ஆயிரம் விளக்கு காவல் நிலையம் வளாகம்) ஆயிரம் விளக்கு, சென்னை-600 006 என்ற முகவரிக்கு தபாலிலும் புகாரை அனுப்பலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *