மகாராஷ்டிராவில் பா.ஜ.க மேற்கொண்ட செயல்பாடுகள் வெட்கக்கேடானது – சோனியா காந்தி
டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்றக் குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:-
பாஜக அரசில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் உரக்க வலியுறுத்தவேண்டும்.
நாட்டில் லாபம் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள், பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் பாஜக மேற்கொண்ட செயல்பாடுகள் வெட்கக்கேடானது.
ஜம்மு-காஷ்மீரில் தேசிய தலைவர்களை அனுமதிக்காத பாஜக, ஐரோப்பிய தலைவர்களை அனுமதிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.