முதலமைச்சர் வேலையை தொடங்கினார் தேவேந்திர பட்னாவிஸ்
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் இன்று ஆளுநர் மாளிகை சென்று, ஆட்சிமையக்க பெரும்பான்மை இருப்பதாக கூறி எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்தனர்.
மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள பட்னாவிஸ் தனது தவறை உணர்ந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்ததை எதிர்த்து சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக அரசு அமைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை காலை தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இரண்டாம் முறை முதல் மந்திரியாக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் தனது வழக்கமான பணிகளை இன்று தொடங்கினார்.
மும்பையில் உள்ள மாநில அரசின் தலைமைச் செயலகமான மந்திராலயாவுக்கு வந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல் வேலையாக முதல் மந்திரி நிவாரண நிதிக்கான காசோலையில் கையொப்பமிட்டார்.
அரசின் உதவிக்காக காத்திருந்த குசும் வெங்குர்லேக்கர் என்ற பெண்ணிடம் அந்த காசோலையை அவர் அளித்தார்.