யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்! – மதுசூதனன் பேச்சு
காசிமேடு கடற்கரையில் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் முன்னிலையில் உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மதுசூதனன் கேக் வெட்டி மீனவர்களுக்கு வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
15 லட்சம் தொண்டர்களைக் கொண்ட இந்த இயக்கத்தை இன்று 2 கோடி தொண்டர்களை சேர்த்தது அம்மா. இன்று யார் யாரோடு சேர்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை நாங்கள் உறுதியாக தேர்தலில் வெற்றிபெறுவோம் தினகரன் ஓர் அரசியல்வாதியே கிடையாது.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு திரைத்துறையில் இருந்து வந்தவர்கள் யாரும் ஆட்சி புரியவில்லை. ரஜினி கமல் உட்பட யாராக இருந்தாலும் மக்கள் யாரை நினைக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜேஷ், மாவட்ட பொருளாளர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.