திருமண நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு கத்தி குத்து!
கர்நாடகாவின் மைசூரு நகரில் நேற்று இரவு நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. தன்வீர் சைத் பங்கேற்றார். அப்போது, அவர் அருகே சென்ற நபர் ஒருவர் திடீரென சைத்தின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.
இதன்பின் அங்கிருந்து தப்பி செல்ல அந்த நபர் முயன்றுள்ளார். அவரை சுற்றியிருந்தவர்கள் உடனடியாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதன்பின்பு சைத் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்திய நபர் மைசூரு நகரை சேர்ந்த பர்ஹான் (வயது 24) என விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைவினை கலைஞரான அவர் எதற்காக, எம்எல்ஏவை கத்தியால் குத்தினார் என தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.