Tamilசினிமா

ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர் நிக் ஜோன்சை காலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த டிசம்பரில் இவர்களது திருமணம் ஜோத்பூர் மற்றும் ராஜஸ்தானில் கிறிஸ்தவ மற்றும் இந்து முறைப்படி 2 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு பிரியங்கா சோப்ரா கணருடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.

இந்த தம்பதியினர் இன்னும் சில வாரத்தில் தங்களது முதலாமாண்டு திருமணநாளை கொண்டாட உள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதியினர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சான்பெர்னாண்டோ பள்ளத்தாக்கு பகுதியில் பிரமாண்ட வீடு ஒன்றை வாங்கி உள்ளனர்.

20 ஆயிரம் சதுர அடி பரப்பளவை கொண்ட இந்த வீட்டை 20 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கி உள்ளனர். இந்திய மதிப்பில் இந்த வீட்டின் மதிப்பு ரூ.144 கோடி ஆகும்.

இந்த ஆடம்பர வீட்டில் 7 படுக்கை அறைகள், 11 குளியலறைகள், நீச்சல் குளம், பொழுது போக்கிற்கான பவுலிங் அரங்கம், சினிமா தியேட்டர், பார் மற்றும் ரெஸ்டாரண்ட், கூடைப்பந்து விளையாடுவதற்கான உள்ளரங்கம், உடற்பயிற்சி மையம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

நிக்ஜோன்ஸ் திருமணத்தின்போது 6.5 மில்லியன் டாலர் விலையில் ஒரு வீடு வாங்கி இருந்தார். அந்த வீட்டை தற்போது 6.9 மில்லியன் டாலருக்கு விற்றுவிட்டார். ஏற்கனவே நிக்ஜோன்ஸ் ரூ.3 கோடிக்கு ஆடம்பர சொகுசு காரை பிரியங்கா சோப்ராவுக்கு பரிசாக அளித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *