Tamilசெய்திகள்

அதிமுக 48வது ஆண்டு விழா கொண்டாட்டம்

அ.தி.மு.க. 48-வது ஆண்டு தொடக்க விழா ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கொடி தோரணங்களுடன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் இன்று தலைமை கழகத்துக்கு வந்திருந்தனர்.

அங்கிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு இருவரும் மாலை அணிவித்து வணங்கினார்கள். கட்சி கொடியை ஓ.பன்னீர் செல்வம் ஏற்றி வைத்தார். அப்போது கூடியிருந்த தொண்டர்கள் எம்.ஜி.ஆர் வாழ்க, புரட்சி தலைவி வாழ்க என்று கோ‌ஷமிட்டனர். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, பொள்ளாச்சி ஜெயராமன், வைகை செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. சமரசம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் தமிழ் மகன் உசேன், ராஜலட்சுமி, முன்னாள் கவுன்சிலர் சின்னையன், முகப்பேர் இளஞ்செழியன், மின்சாரம் சத்திய நாராயண மூர்த்தி, ராமலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் விழா கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *