Tamilசினிமா

வரலாற்று படத்தில் நடிக்கும் மோகன்லால் – பஸ்ட் லுக் புகைப்படம் ரிலீஸ்

மோகன்லால் வித்தியாசமான கதைகள், கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சூர்யாவின் காப்பான் படத்தில் பிரதமர் வேடத்தில் வந்தார். மலையாளத்தில் அரபிக் கடலிண்டே சிம்ஹம் என்ற சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் நான்காவது குஞ்சலி மரைக்கார் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்தே அரபிக் கடலிண்டே சிம்ஹம் படம் தயாராகிறது.

இதில் மோகன்லால் கடற்படை தலைவராக நடிக்கிறார். இதுவரை அவர் நடித்த படங்களில் இருந்து முற்றிலும் இது மாறுபட்டு இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கிறார்கள். பிரியதர்ஷன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

ரூ.100 கோடி செலவில் இந்த படம் தயாராகிறது. மோகன்லால் நடித்து சமீபத்தில் வெளியான லூசிபர் படம் பெரிய வெற்றி பெற்றது. அரபிக்கலிண்டே சிம்ஹம் படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. தமிழிலும் இதை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

இந்த படத்தில் நடிக்கும் தனது தோற்றத்தை மோகன்லால் சமீபத்தில் வெளியிட்டு உள்ளார். அத்துடன் படம் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி திரைக்கு வரும் என்றும் அறிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *