‘பேட்ட’ சாதனையை முறியடித்த ‘காப்பான்’
சூர்யா-கே.வி.ஆனந்த் 3-வது முறையாக கூட்டணி சேர்ந்த படம் ’காப்பான்’. மோகன்லால், ஆர்யா, சாயீஷா, பொம்மன் இரானி போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 20-ந் தேதி வெளியான காப்பான் படம் முதல் நாளில் 2.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன்மூலம் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் ரஜினியின் பேட்ட படம் முதல் நாளில் 2.1 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்தது. தற்போது காப்பான் படம் அதனை முறியடித்துள்ளது.