Tamilசெய்திகள்

திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைப்பு!

சென்னையில் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் இன்று தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி மைதானத்தில் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. மு.க.ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால், இந்த கூட்டம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் பொதுக்குழு கூட்டத்தை திமுக ஒத்திவைத்திருக்கிறது. இது தொடர்பாக திமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பகழன் இன்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். மேலும், பொதுக்குழு கூட்டத்தின் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *