Tamilசெய்திகள்

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி – முதல்வர் அறிவிப்பு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் கிராமத்தில் மணிகண்டன், வெங்கடேஷ், விஷ்ணு பிரசாத், ஸ்ரீநவீன், கதிரவன், சிவபாலன் ஆகிய 6 மாணவர்கள் காவேரி ஆற்றில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் குளிக்கச் சென்ற போது, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், எ.சாத்தனூர் மதுரா அஜிஸ் நகர் பேருந்து நிறுத்தம் அருகே 19-ந்தேதி அன்று பேருந்தும், லாரியும் மோதியதில் ஓட்டுநர் அலெக்சாண்டர், கிளினர் சக்திவேல், விருதுநகரைச் சேர்ந்த பயணி மோனிஷா மற்றும் அடையாளம் தெரியாத ஒரு நபர் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *