ரோஜர் பெடெரெர்க்கு கடும் சவாலாக அமைந்த சுமித் நாகல்
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில், முன்னணி வீரர் ரோஜர் பெடரரை இந்திய வீரர் சுமித் நாகல் எதிர்கொண்டார்.
ஆரம்பத்தில் மிகவும் உற்சாகமாக ஆடிய சுமித் நாகல், ரோஜர் பெடரருக்கு கடும் சவாலாக விளங்கினார். ஓரிரு பாயிண்டுகளை பெடரர் சொதப்பினார். இதனை பயன்படுத்தி முன்னேறிய சுமித் நாகல், முதல் செட்டில் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார். அதன்பின்னர் அபாரமாக விளையாடிய பெடரர் 2வது செட்டை 6-1 என கைப்பற்றினார்.
எனினும் இந்த செட்டில் சுமித் நாகல் சிறப்பாக செயல்பட்டார். ரோஜர் பெடரர் தேவையற்ற வகையில் 33 தவறுகளை செய்த நிலையில், சுமித் நாகல் 19 தவறுகளையே செய்திருந்தார். அதன்பின்னர் மூன்றாவது செட்டையும் பெடரர் கைப்பற்றினார்.
1998ம் ஆண்டில் மகேஷ் பூபதி, லியாண்டர் பயஸ் அமெரிக்க ஓபன் பிரதான சுற்றில் பங்கேற்ற பிறகு இப்போதுதான் 2 இந்திய வீரர்கள் (சுமித் நாகல், பிரஜ்னேஷ்) பிரதான சுற்றில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.