புரோ கபடி லீக் – பெங்களூர் அணியிடம் தோற்றுபோன தமிழ் தலைவாஸ்
12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் அரியானா மாநிலம் சோனிபட்டில் நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியும் தமிழ் தலைவாஸ் அணியும் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் விட்டுக் கொடுக்காமல் விளையாடினர். இதனால் இரு அணிகளின் புள்ளிகள் சமனிலையில் இருந்து வந்தது.
ஆட்டத்தின் இறுதி கட்டத்தில், பெங்களூரு புல்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டது. இதையடுத்து, பெங்களூரு புல்ஸ் அணி 44 – 35 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 5-வது தோல்வியாகும். பெங்களுரு புல்ஸ் அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும்.