கற்பழிப்பு வழக்கில் கைதான அமெரிக்க தொழிலதிபர் தற்கொலை
அமெரிக்காவில் நிதி நிறுவன அதிபராகவும், கோடீஸ்வரருமாக இருந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். இவர் மன்ஹாட்டன் மற்றும் புளோரிடாவில் உள்ள தனது பங்களாவில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை பல சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் எப்ஸ்டீனை கடந்த மாதம் கைது செய்து, மன்ஹாட்டன் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மன்ஹாட்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் சிறை அறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.