கட்டிப்பிடித்த விஜய்! – மகிழ்ச்சியடைந்த சவுந்தரராஜா
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கி வரும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில், நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தன்னுடைய ஷூட்டிங்கை முடித்துவிட்டதாக நடிகர் சவுந்தரராஜா கூறியுள்ளார். மேலும் ‘இப்படத்தில் விஜய் அண்ணாவுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. கிட்டத்தட்ட 30 நாட்கள் அவருடன் நடித்துள்ளேன். அவரது எளிமையை சொல்ல வார்த்தைகளே இல்லை. குறிப்பாக அவர் என்னை கட்டிபிடித்ததையும், சிரிப்பையும் என்னால் மறக்க முடியாது. இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கிய இயக்குனர் அட்லீக்கு மிகப்பெரிய நன்றி’ என்று கூறியுள்ளார்.