விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டி – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்
லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜோகோவிச் – பெடரர் பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டை ஜோகோவிச் 7(7)-6(5) எனக் கைப்பற்றினார். 2-வது செட்டை பெடரர் 6-1 என எளிதில் கைப்பற்றினார்.
3-வது செட்டை ஜோகோவிச் 7(7)-6(4) எனக் கைப்பற்றினார். 4-வது செட்டை 6-4 என ரோஜர் பெடரர் கைப்பற்றினார். இதனால் நான்கு செட்களில் இருவரும் தலா இரண்டில் வெற்றி பெற்றதால் 2-2 என சமநிலைப் பெற்றனர்.
சாம்பியனை தீர்மானிக்கும் ஐந்தாவது செட்டில் இருவரும் மல்லுகட்டினர். ஜோகோவிச் சர்வீசை தொடங்கினார். முதல் கேம்-ஐ ஜோகோவிச் கைப்பற்றினார். 2-வது கேம்-ஐ பெடரர் கைப்பற்றினார். 3-வது கேம்-ஐ ஜோகோவிச் கைப்பற்றினார். ரோஜர் பெடரின் சர்வீஸ் செய்த 4-வது கேம்-ஐ ஜோகோவிச் அட்டகாசமாக எதிர்கொண்டார். இருந்தாலும் கடைசியில் பெடரர் கைப்பற்றினார்.