மெக்ஸிகோவில் டிராக்டர் டிரெய்லர் மீது பேருந்து மோதி விபத்து – 21 பேர் மரணம்
மெக்சிகோ நாட்டின் மெக்சிகோ சிட்டி நகரில் இருந்து டுஸ்லா குடரஸ் பகுதி நோக்கி பயணிகள் பஸ் சென்று கொண்டிருந்தது.
வெராகுருஸ் பகுதி அருகே சென்றபோது பஸ் திடீரென முன்னால் சென்ற டிராக்டர் டிரெய்லர் மீது வேகமாக மோதியதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் பலியாகினர் என்றும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 பேர் இறந்தனர் என்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
பயணிகள் பஸ் டிராக்டர் டிரெய்லருடன் மோதிய விபத்தில் 21 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.