வைரலாகும் ‘தளபதி 63’ படப்பிடிப்பு புகைப்படம்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் விளையாட்டு சம்பந்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் விஜய் பேருந்து ஒன்றில் இருந்து இறங்குவது போன்ற ஒரு சிறிய வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அந்த வீடியோவில் விஜய் ஸ்டைலிஷ் தோற்றத்தில் இருந்தார்.
தற்போது விளையாட்டு மைதானத்தில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இதில் விஜய் களத்திற்கு வெளியே கழுத்தில் காலர் பெல்ட் அணிந்து கொண்டு வீல் சேரில் உட்கார்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.
விஜய்யின் 63-வது படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், யோகி பாபு, இந்துஜா, ஆத்மிகா, ரெபா மோனிக்கா ஜான், வர்ஷா பொலம்மா, ஞானசம்பந்தம், ஆனந்த்ராஜ், சாய் தீனா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.