இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 4 வது ஒரு நாள் போட்டியின் இடம் மாற்றம்
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியது.
இந்த டெஸ்ட் முடிந்தபின் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 21-ந்தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது. 2-வது போட்டி இந்தூரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், டிக்கெட்டுக்களை பிரித்துக் கொள்வதில் மத்திய பிரதேச கிரக்கெட் சங்கத்திற்கும், பிசிசிஐ-க்கும் முரண்பாடு ஏற்பட்டதால் போட்டி விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டது.
3-வது போட்டி 27-ந்தேதி புனேயில் நடக்கிறது. 4-வது போட்டி அக்டோபர் 29-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மும்பை கிரிக்கெட் சங்கத்தால் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாத சூழ்நிலை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் போட்டியை நடத்த பணம் பிரச்சனை ஏற்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் கூறியதாக தெரிகிறது.
இதனால் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருந்த நான்காவது ஆட்டம் மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நவம்பர் 1-ந்தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது.