சிவகார்த்திகேயன் படத்தில் யோகி பாபு, சூரி!
சிவகார்த்திகேயன் நடிப்பில் 5 படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒன்று இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படம். சின்னத்திரையில் வலம் வந்த சிவகார்த்திகேயனை மெரீனா படம் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ்.
மெரினா திரைப்படத்தைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் இந்த கூட்டணி இணைந்தது. தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அனு இம்மானுவேல் நடிப்பதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், முன்னணி காமெடியன்கள் யோகி பாபு மற்றும் சூரி படக்குழுவில் இணைந்துள்ளனர். இதுதவிர பாரதிராஜா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரிக்கிறார்.