பெண்கல் மொபைல் போனை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் – நிக்கி கல்ராணி வேண்டுகோள்
நிக்கி கல்ராணி, ஜீவா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் ‘கீ’. இப்படம் செல்போன்களால ஏற்படும் தீமைகள் பற்றி பேசுகிறது.
தற்போது இப்படத்தின் புரோமோஷன் நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளும் நிக்கி கல்ராணி, “செல்போனை பெண்கள் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்” என்ற வேண்டுகோளையும் வைக்கிறார்.
மேலும், ஜீவாவுடன் நடித்தது மிவும் மகிழ்ச்சியாக இருந்தது. கீ படம் நானும் ஜீவாவும் நடித்த முதல் படம், ஆனால், கலகலப்பு 2 முதலில் ரிலீஸ் ஆனது. நாங்கள் இருவரும் துறுதுறுவாக இருப்போம். படப்பிடிப்பில் சண்டை போட்டுக் கொண்டே இருப்போம். ஜாலியாக பலரை கலாய்த்துக் கொண்டே இருப்போம், என்றும் தெரிவித்துள்ளார்.