மதுரா தொகுதியில் போட்டியிடும் நடிகை ஹேமாமாலினியின் சொத்து மதிப்பு ரூ.101 கோடி
உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ஹேமமாலினி தனது வேட்பு மனுவில் சொத்து மதிப்பு மொத்தம் ரூ.101 கோடி என தெரிவித்துள்ளார். இதில் பங்களாக்கள், நகைகள், பணம், பங்குகள், வைப்புத்தொகை என அனைத்தும் அடங்கும். 2014 தேர்தலின்போது அவர் தனது சொத்து மதிப்பு சுமார் ரூ.66 கோடி என தெரிவித்து இருந்தார். அவர் தாக்கல் செய்த விவரப்படி 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.34.46 கோடி அதிகரித்துள்ளது.
அவரது கணவர் தர்மேந்திராவின் சொத்து மதிப்பையும் சேர்த்து மொத்தம் ரூ.123.85 கோடி என கூறப்பட்டுள்ளது. 2013-14ல் ஹேமமாலினியின் வருமானம் ரூ.15.93 லட்சம் என குறிப்பிட்டுள்ளார். 2017-18ல் வருமானம் ரூ.1.19 கோடி என தெரிவித்துள்ளார்.