வெட்டு வாங்காத வெற்றிமாறன் படம்!
வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `வடசென்னை’.
வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வடசென்னை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு தணிக்கை குழுவில் `ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி நடிகர் தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,
வடசென்னை அதன் இயல்பான குணத்துடன் வெட்டு ஏதுமின்றி தணிக்கை குழுவில் `ஏ’ சான்றிதழை பெற்றுள்ளது. என்று குறிப்பிட்டுள்ளார்.
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி படம் ரிலீசாக இருக்கிறது.
மூன்று பாகங்களாக உருவாகும் வடசென்னை படத்தின் முதல் பாகத்திற்கான புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியான டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு மற்றும் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.