வில்லத்தனமான வேடத்தில் நடிக்கும் தமன்னா
கண்ணே கலைமானே படத்தை தொடர்ந்து தமன்னா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அடுத்தடுத்து சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
முன்னணி நாயகிகள் சிலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் தமன்னா தற்போது தெலுங்கில் தட் இஸ் மகாலட்சுமி, தமிழில் தேவி 2 என இரு படங்களில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். “2019ஆம் ஆண்டில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதே என் விருப்பமாக உள்ளது. இத்தகைய படங்களில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று தமன்னா தெரிவித்துள்ளார்.
விஷாலுடன் இணைந்து கத்திச் சண்டை படத்தில் நடித்த அவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் மீண்டும் சேர்ந்து நடித்து வருகிறார். இதில் வில்லத்தனமான கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சவாலான கதாபாத்திரத்தில் அதில் நடிக்க உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் வலுப்பெற வேண்டும் என கூறியுள்ளார்.
தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான எப் 2 படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அவர் ஓம்கர் இயக்கத்தில் ராஜு கரி காதி 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.