மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்திய வங்காளதேசம்
பாகிஸ்தான் மகளிர் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. நேற்று நடைபெற்ற ஒரே ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் நிதானமாக ஆடிய பாகிஸ்தான் வீராங்கனைகளை வங்காளதேச பந்து வீச்சாளர்கள் விரைவில் வெளியேற்றினர்.
அதனால் பாகிஸ்தான் மகளிர் அணியினர் 34.5 ஓவரில் 94 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகமாக கேப்டன் ஜவேரியா கான் 29 ரன்கள் எடுத்தார்.
வங்காளதேசம் அணி சார்பில் கதிஜா துல் குப்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, 95 ரன்களை இலக்காக கொண்டு வங்காளதேசம் அணி விளையாடியது. பர்கனா ஹக் 48 ரன்களும், ருமானா அகமது 34 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.
இறுதியில், வங்காளதேசம் அணியினர் 29 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றனர். கதிஜா துல் குப்ரா ஆட்ட நாயகி விருது வாங்கினார்.