வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் – 5 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் சேர்த்த இந்தியா
இந்தியா- மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் அறிமுக வீரர் பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே ராகுல் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தலும், புஜாரா – ஷா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அறிமுக வீரர் பிரித்வி ஷா சதத்தில் உதவியால், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா வலுவான நிலையில் இருந்தது. முதல் நாளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது.
கேப்டன் விராட் கோலி 72 ரன்களுடனும் , விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், 2-வது நாள் ஆட்டம் துவங்கியதும், விராட் கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிஷப் பண்ட் மறுமுனையில் அதிரடியாக விளையாடினார்.
தொடர்ந்து விளையாடிய விராட் கோலி, டெஸ்ட் போடிகளில் தனது 24-வது சதத்தை பதிவு செய்தார். சதம் அடிப்பார் என்று எதிரப்பார்க்கப்பட்ட பண்ட் 92 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. விராட் கோலி 120 ரன்களுடனும், ஜடேஜா 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.