வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான பயிற்சி ஆட்டம் – இங்கிலாந்து வெற்றி
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 எனக் கைப்பற்றியது. இந்நிலையில் நாளைமறுநாள் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.
இந்தத்தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை . டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் லெவன் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பேர்ஸ்டோவ் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஜேசன் ராய் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தனர்.
ஜேசன் ராய் 82 பந்தில் 15 பவுண்டரி, 1 சிக்சருடன் 110 ரன்கள் சேர்த்து ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார். ஜோ ரூட் 81 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 114 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மொயீன் அலி 18 பந்தில் 24 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 14 பந்தில் 22 ரன்களும் சேர்க்க இங்கிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது.
பின்னர் 372 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் லெவன் அணி களம் இறங்கியது. அந்த அணி 43.5 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.