லா லிகா கால்பந்து தொடர் – ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி கிரோனா வெற்றி
லா லிகா கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் முன்னணி அணியான ரியல் மாட்ரிட் தனது சொந்த மைதானத்தில் கிரோனா அணியை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கேஸ்மிரோ கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் அந்த 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.
2-வது பாதி நேர ஆட்டத்தில் கிரோனா அணி வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் அந்த அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஸ்டுயானி பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார்.
இதனால் ஸ்கோர் 1-1 சமநிலைப் பெற்றது. அடுத்த 10-வது நிமிடத்தில் ஆட்டத்தின் 75-வது நிமிடத்தில் போர்ட்டு ஒரு கோல் அடித்தார். இதனால் கிரோனா 2-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் ரியல் மாட்ரிட் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. ஆகவே கிரோனா 2-1 என ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது.
இந்த தோல்வி ரியல் மாட்ரிட் அணிக்கு தரவரிசையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்சிலோனா 54 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளது. அட்லெடிகோ டி மாட்ரிட் 47 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ரியல் மாட்ரி்ட 45 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
இன்னும் 10 போட்டிகள் உள்ளன. ரியல் மாட்ரிட் 9 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் உள்ளன. பார்சிலோனாவை பின்னுக்குத்தள்ள ரியல் மாட்ரிட் 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் முடியா என்பது சந்தேகமே?.