எழில் இயக்கத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்
ரமேஷ்.பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ் சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், சசி இயக்கத்தில் உருவாகும் படத்தை தயாரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தையும் அதே நிறுவனமே தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்த படத்தின் துவக்க விழா எளிமையாக கோவில் ஒன்றில் நடைபெற்றது. காமெடி படமாக உருவாகும் இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைக்கிறார்.
மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. மார்ச்சில் படப்பிடிப்பை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.