ரவுடி பேபி பாடலின் புதிய சாதனை!
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், கிருஷ்ணா, வரலட்சுமி, ரோபோ சங்கர், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் ‘ரவுடி பேபி’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் வெளியான சில நாட்களிலேயே, ‘ரவுடி பேபி’ பாடல் வீடியோவை யூடியூப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்கள். தொடக்க முதலே பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
தற்போது வரை ரவுடி பேபி பாடலை 200 மில்லியன் (20 கோடி) பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். இதன்மூலம் தென்னிந்திய திரையுலகில் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட யூடியூப் வீடியோ பட்டியலில் ‘ரவுடி பேபி’ பாடல் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.