ரஜினிகாந்தின் புதிய படத்திற்கு ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன்!
2.0, பேட்ட படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த நடிகர்கள் தேர்வையும் முடித்துவிட்டு, மார்ச் இறுதியில் படப்பிடிப்பை துவங்க படக்குழு முடிவு செய்துள்ளது.
முருகதாஸ் திரைக்கதை வடிவத்தை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, தளபதி படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி சாருடன் இணைவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் 27 வருடங்களுக்கு பிறகு ரஜினி படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.